மக்கா .... நமக்கு தெரியப்பட்ட இல்ல நமக்கு தெரிசவங்களுக்கு தெரியப்பட்ட குடிகார குப்பணுக கதை இது
குப்பன் 1:
இந்த குப்பனுக்கு கல்யாணம் ஆகி வூட்டுல தங்கச்சி தண்ணி எல்லாம் அடிக்க கூடாதுணு stricta சொல்லிடாங்கோ . நம்ம குப்பனோ முடியவே முடியாதுனு உப்பு சத்தியகிரகம் மாதிரி குவார்டர் மப்போகிறேகம் எல்லாம் பண்ணி கடெசிலே friday மட்டும் 2 பீர்னு permission வாங்கிடான். இதை சொன்ன நம்ம நண்பன் கிட்ட கேட்டேன் ' என்ன மச்சி 2 பீர வச்சுக்கிட்டு மோந்துக கூட முடியாதேனு' . அப்போ தான் தெரிந்சூது அந்த நாதாரி ரெண்டு 40 ounceஅ வாங்கிட்டு வந்து அடிக்கிற கதை ...தங்கச்சியும் பீர எல்லாம் முன்ன கின்னா பார்த்தது கிடையாததுனாலே இந்த நாய் ஊர ஏமாதிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கு....என்னைக்காவது அவுங்க 12 ounce பீர் bottle பார்க்க போறங்கோ....அன்னைக்கு இருக்குடி அவனுக்கு தீபாவளி
குப்பன் 2:
இந்த குப்பன் தலை கீழ நின்னு பார்த்தான் குட்டி காரணம் அடிச்சு பார்த்தான் பருப்பு வேகலே. வூட்டுலெ ஸ்திரீக்தா சொல்லிடாங்கோ....தண்ணி அடிச்ச விளக்குமாறு பின்சுடும்ணு . ஆனா Sister ரொம்ப நல்லவங்க ... Friends நாங்க வீட்டுக்கு போன ....எங்களுக்கு மட்டும் பீர் சாப்பிட rights உண்டு. நம்ம பையன் தான் கில்லாடி ஆச்சே ... இந்த pointa யூஸ் பண்ணாம இருப்பானா. அவன மாதிரி நாளஞ்சு குப்பணுகல வூட்டுக்கு கூப்பிட்டு அவணுகளுக்கு சரக்கு வாங்கி கொடுத்து .... தங்கச்சி kitchen உள்ள போகும் போதெலாம் அவணுக கிட்ட இருந்து திருட்டு தனமா வாங்கி அடிக்கிறது. நடுவுல dialog வேற " இப்படி சிங்கத்தை குண்டுக்குள்ள அடைச்சிடாங்கேலேனு" . அப்புறம் அவன் Bottoms up அடிக்கிரேனு ரெண்டு வாய் மட்டும் குடிக்க பசங்க எல்லாம் " சிங்கம் அடிச்ச bottoms uppa பாருங்கடானு" அவன வாரியது வேற கதை"
குப்பன் 3:
இந்த குப்பன் கொஞ்சம் ரீஜன்டு. கல்யாணத்துக்கு முன்னாடியே நான் அடிக்கடி வெல விஷயமா conferenceக்கு போவேணு ஒரு பிட்டா போட்டு வச்சுடான். இப்போ கல்யாணம் ஆனத்துக்கு அப்புறம் conferenceனு வூட்டுலெ டூமீல் விட்டுட்டு பக்கது ஊருலெ இருக்கிற என் வீட்டுக்கு வந்து ஆட்டைய போட்டு ஊயிர வாங்குறான்...அவனுக்கு சரக்கு ஊத்தி கொடுத்தே ஒட்டான்டீ ஆகிட்டேன். நண்பன் முதுகுலே குத்தின திரோகினு பேரு வாங்கினாலும் பரவாயிலேனு, அவன் வூட்டுலெ போட்டு குடுகிறதா முடிவு பண்ணிட்டேன். ரகுவரண் பாட்சா படத்துலெ சொல்றெ மாதிரி 'எனக்கு இதை விட்ட வேற வழி தெரியெல ரங்கசாமி' தான்
ஆனா ஒண்ணு மக்களே .... ஜில்லுனு ஒரு காதல் படத்துல வர ஜோதிகா மாதிரி ஊத்தி குடுக்கிற பொண்டாட்டி வந்துட்டா நாங்க என் இப்படி டக்காள்டி வேல பண்ண போறோம் ... என்ன நான் சொல்றது
Wy
Tuesday, December 05, 2006
Subscribe to:
Posts (Atom)